Friday, May 30, 2008

காங்கிரஸ் ஆட்சி

எதனையும் நான் நம்பியிருக்கவில்லை
எதைக்கண்டும் எனக்கு பயமில்லை
நான் சுதந்திரன்.

எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் என்னவென்றால் ஒவ்வொரு தேர்தலின் முடிவிலும் அடுத்து தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைப்போம் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.
எனது சந்தேகம் என்னவென்றால் காமராஜர் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பின் எப்படி காமராஜர் ஆட்சி அமைப்பார்கள் ?. இறந்தவர் உயிருடன் மீண்டு வந்த சரித்திரம் இல்லை. ஏசுவை தவிர. அதுவும் உண்மையா இல்லையா என்பது விவாதத்திற்குரிய விஷயம். காமராஜர் ஏசுவை போல கடவுளின் மகனும் அல்ல. பின் எப்படி உயிருடன் வந்து ஆட்சி அமைப்பார்?.
பிறகுதான் தெரிந்தது கர்மவீரர் நேர்மையானவராக இருந்தார். அதனைப்போல நாங்களும் நேர்மையான ஆட்சி அம்மைப்போம் என்று சிம்பாலிக்காக சொல்கிறார்கள் என்று. கர்மவீரரின் மீது எனக்கும் மிகுந்த மரியாதை உண்டு . அவரின் எளிமையான தோற்றத்தை பார்த்தும் அவரைப்பற்றிய அவரின் நேர்மையான குணத்தை பற்றிய கதைகளைக் கேட்டும்.
ஆனால் ஒரு சம்பவம் எனக்கு காமராஜரை பற்றிய எனக்கிருந்த பிம்பத்தை கலைத்தது. அது என்னவென்றால் காமராஜர் எப்பொழுது கரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வரும்பொழுதும் கோவையை தலைமையிடமாக கொண்ட ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான காரில் திருச்சியில் இருந்து வருவது வழக்கம் என்று பலர் கூறக்கேட்ட பிறகே இதனை எழுதுகிறேன்.
ஒரு வேலை இது எதிர்க்க்ச்சிக்கரர்களின் பொய் பிரச்சாரமாகவோ இருக்கலாம்.
எது எப்படியோ காங்கிரஸ் தலைவர்கள் தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைப்போம் என்றும் அது மிக நேர்மையானதாக இருக்கும் என்று சொன்னால் நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
நானும் அந்த நல்லாட்சியை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன்.