Friday, June 27, 2008

மூடு சரியா வேல செய்யல பாலியல் கதை 2

கிராமத்து மனிதர்களிடம் நகைச்சுவைக்கு என்றுமே பஞ்சம் இருக்காது. அதுவும் பாலியல் சார்ந்த பேச்சுக்கள் என்றால் அவர்களிடம் என்றுமே ஒரு துள்ளலான நடையில் மிகுந்த உற்சாகத்துடன் பேச ஆரம்பிப்பார்கள். இந்த பேச்சுக்களில் என்றும் வக்கிர எண்ணங்களோ ஆபாசமான வார்த்தைகளோ இருப்பதில்லை.

நாங்கள் முன்பு கிராமத்தில் வசித்து வந்த சமயம் எனது அப்பா தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். மரம் குத்தகைக்கு பேசி ஆட்களை வைத்து தேங்காய்களை வெட்டி கிடங்கிற்கு அனுப்புவார். வேலை நேரங்களில் வேலை ஆட்களுடன் நகைச்சுவையாக ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார். ஏன் அப்படி என்று கேட்டால் நகைச்சுவைனாலேயே ஒரு மனிதனை நாம் மிக்கவும் கிட்ட நெருங்க முடியும்.வேலை செய்யும் அலுப்பும் தெரியாது என்பார்.

அப்படி ஒரு முறை காய் வெட்டிக்கொண்டிருந்த பொழுது தேங்க்கைகளை வெட்டாள் ராஜேந்திரன் கரும்பங்காட்டுக்குள் விழுமாறு போட்டுக்கொண்டிருந்தார். எனது அப்பாவும் கரும்பங்காட்டுக்குள் காய்களை போடாதே எடுப்பது சிரமம் என்றார்.

ஆனால் மீண்டும் வெட்டாள் கரும்பங்க்காட்டுக்குள்லேயே காய்களை போட்டுக்கொண்டிருந்தார்.

மீண்டும் அப்பா கேட்டார் ' ஏன் சொல்ல சொல்ல கேட்காமலே மீண்டும் மீண்டும் காய்களை கரும்பங்காட்டுக்குள் போடுகிறாய்?' என்று.

வெட்டாள் ராஜேந்திரன் சொன்னான் ' மூடு சரியா வேல செய்ய மாடேங்குது அண்ணா' என்று .

அப்பாவிற்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. வேட்டாளுக்கும் எனக்கும் ஒன்றும் புரியவில்லை ஏன்? இப்படி சிரிக்கிறார் என்று. ஏன் சிர்க்கிறீர்கள்? என்று கேட்டேன்.

அப்பா சொன்னார் 'மூடு சரியா வேல செய்யல என்கிறான். மூடு எப்படி வேல செய்யும்? கிடா தானே வேலைசெய்யும்' என்று. இதைக்கேட்ட நானும் வெட்டாளும் விழுந்துவிழுந்து சிரித்தோம்.

குறிப்பு : மூடு என்பது தமிழில் பெண் ஆடு என்று பொருள் . கிடா என்றால் ஆண் ஆடு என்று பொருள். இங்கு வெட்டாள் சொன்ன மூடு என்பது ஆங்கில வார்த்தையான mood என்பதாகும்.

Thursday, June 26, 2008

கிரிக்கட்டும் சுயமைதுனமும் பாலியல் கதைகள் 1

அண்மையில் கிரா, கழனியூரன் தொகுத்த மறைவாய் சொன்ன கதைகளை வாசிக்க நேர்ந்தது. கதையை வாசித்தவுடன், ஏன் நாமும் நாம் கண்ட கேட்ட கதைகளை பதிவு செய்ய கூடாது? என்று தோன்றியது. அதன் விளைவாக தோன்றிய ஒரு சிறிய முயற்சியே இது. எவ்வளவு தூரம் இது தொடரும் என்று தெரியவில்லை . தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன்.

இக் கதைகளில் எந்த ஒரு விரசமும் இல்லாமலும் சிந்திக்கக் கூடிய விதத்திலும் நகைச்சுவையாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்கிறேன்.

கிரிக்கட்டும் சுயமைதுனமும்

கோடை விடுமுறை வந்து விட்டாலே அனைத்து பசங்க பிள்ளைங்களுக்கம் ஒரே கொண்டடந்தான் . நாங்கள் பதின்பருவ வயதை அடைந்ததும் கைலி வேஷ்டி கட்டியதுமே பெண் பிள்ளைகளுடன் விளையாடுவதை தவிர்த்துவிட்டோம். அல்லது பெண் பிள்ளைகள் தவிர்த்துவிட்டார்கள்.

எங்களின் தலைமுறைதான் கிராமத்தில் பாரம்பரியமாக விளையாடிவந்த கபடி,தாயம், பல்லங்குளி, சடுகுடு, மற்ற பாரம்பரிய விளையாட்டுக்களில் இருந்து மாறி புதிய விளையாட்டுக்களான கிரிக்கட்டுக்கு மாறிக்கொண்டிருந்தோம்.

ஓரு முறை அப்படி கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த பொழுது எந்த ஒரு பாதுகாப்பு வஸ்த்துக்களும் அணியாமல் விளையாடிய முருகனின் குஞ்ச்சாமனியில் மணியில் பந்து தாக்கி விட்டது. உட்னே அவன் வலியால் புரண்டு அழ ஆரம்பித்தான். எங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை என்ன செய்வதென்று. அப்பா அம்மாவிடம் சொல்ல கூச்சம் மட்டுமல்லாமல் பயம். என்ன செய்வது என்று தெரியாமல் நாங்கள் முழித்துக்கொண்டிருந்த பொழுது நடேசன் சொன்னான் ' நம்ம குமாரண்ணன் கிட்ட போய் விஷயத்தை சொல்வோம் என்றான். குமார் அண்ணன் தான் அந்த விஷயத்தில் எங்கள் குருநாதர். முதன் முதலில் சுயமைதுனம் செய்ய கற்றுக்கொடுத்தவர். ஆண் பெண் உறுப்புகளை கோயில் சுவர்களில் வரைய கற்றுக் கொடுத்தவர். அவரிடமே ஆலோசனை கேட்கலாமென்று முடிவு செய்து சென்று விவரத்தை சொன்னோம் . அவர் மிகுந்த கோபமாகி 'என்னடா இப்படி செஞ்சுட்டிங்க' என்று சொல்லி குஞ்சாமணியை காட்ட சொன்னார் . முருகனும் கைலியை அவிழ்த்து காட்டினான் . அவர் சொன்னார் ' ஒன்னுமில்லடா போய் சுயமைதுனம் பண்ணுடா செரியயிரும்' என்று.

உடனே நாங்கள் அனைவரும் காட்டில் உள்ள பாறைகளின் மறைவிற்கு சென்றோம். ஏனென்றால் நாங்கள் கிரிக்கெட்டிலும் சரி சுயமைதுனம் செய்வதிலும் சரி யார் அதிக நேரம் அவுட் ஆகாமல் இருக்கிறோம் என்பதில் பந்தயம் கட்டித்தான் விளையாடுவோம் , செய்வோம்.

எழுத்தாளர் ச.தமிழ்செல்வனுக்கு ஒரு கடிதம்

அன்புள்ள தமிழ் சார் அவர்களுக்கு, வணக்கம். நான் பெருமாள் கரூரில் இருந்து.

நான் உங்கள் முகஸ்துதிக்காக சொல்லவில்லை .நிச்சயமாக தற்போதுள்ள தமிழின் ஆகசிறந்த ஐந்து படைப்பாளிகளில் நீங்களும் ஒருவர்.

அதற்க்கு சான்று உங்கள் கட்டுரையில் வரும் பின்வரும் வரிகள்,

'அவனின் மன நோய் தீர்ந்து மேலெழுந்து வந்தான?( விடுபட்ட வார்த்தைகளில் ஒரு முறை உங்கள் நண்பர் மன நலமில்லாமல் இருந்ததைபர்ரிய கட்டுரையில் வருவது)

மற்றொன்று ' வண்டியில் இருந்து இறங்கிய வெள்ளை உடை மனிதர்கள் வானத்தில் இருக்கும் பிதாவையும் பாவிகளாகிய எங்களையும் மாறி மாறி பார்த்து'.(விடுபட்ட வார்த்தைகள் கிருஸ்த்து மத பிர்ச்சாரர்களை பற்றிய கட்டுரை).

நிச்சயமாக ஒரு உலக இலக்கியத்திற்கு இணையான வரிகள் மேற்சொன்னவை .

நன்றி

குண்டுமணியும் தமிழின் பின் நவீனத்துவ எழுத்தாளனும்

ஒரு முறை கரூரில் நான் வழக்கமாகசெல்லும் வழியில் இருந்து ஏதோ ஒரு வேலையாக வேறு ஒரு ரஸ்தாவில் செல்ல நேர்ந்தது. அப்பொழுது போக்குவரத்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பொழுது தற்செயலாக ஒரு சிறிய விளம்பர பலகையை பார்த்தேன். அதில் மிகச்சிறியதாக எழுத்தாளர் ச. தமிழ் செல்வன் அவர்களின் பெயர் இருந்தது . அதற்கும் கீழ் அவர் கலந்து கொள்ளும் கூட்டத்தை பற்றியும் ,நிகழ்ச்சி நிரலும் இருந்தது .

எனக்கு மிகுந்த ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. ஏனென்றால் தமிழின் மிகசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான ச. தமிழ் செல்வன் கரூர் வந்துள்ளார். இது மகிழ்ச்சியாகவும் அதே சமயம் அவரின் வருகையை எவரும் கண்டுகொள்ளாமலும் , கொண்ட்டாடாமலும் இருப்பது மனக்கஷ்டத்தையும் அளித்தது. நானே வழக்கமாக செல்லும் ரஸ்தாவில் சென்றிருந்தால் இந்த விளம்பரத்தை பார்த்திருக்க முடியாது.

பாருங்கள் தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர் ஒரு நகருக்கு வந்துள்ளார் . அவரை வரவேற்காமல் மக்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று. மற்றொரு சம்பவத்துடன் இந்த சம்பவத்தை ஒப்பிடும் பொழுது நம் கலாச்சாரம் எவ்வளவு வறுமையில் இருக்கிறது என்று உணர முடியும்.

அந்த சம்பவம் என்னவென்றால் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒவ்வொரு நடிகர்களை சம்பளத்திற்கு அமர்த்தி தங்களின் கொள்கைகளை? மக்கள் மத்தியில் சொல்ல பிரச்சாரத்திற்காக பயன்படுத்தியது அனைவரும் அறிந்ததே. அதில் ஒரு அரசியல் கட்சி குண்டுமணி என்றொரு நகைச்சுவை நடிகரை தனது பிர்ச்சாரதிற்க்காக பயன்படுத்தியது. அந்த நடிகர் கரூர் வந்த பொழுது அவருக்கு கொடுத்த வரவேற்பை பாருங்கள்! என்னவென்று சொல்வது .

மாலையில் வரும் அந்த பேர்வழிக்கு காலையில் இருந்தே ஒலிபெருக்கியில் இதோ வந்து விட்டார் அதோ வந்து விட்டார் என்று விளம்பரம்!. மட்டுமல்லாமல், மக்களின் கூட்டம் வேறு அந்த காமடியனை பார்க்க நான்கைந்து மணிநேரமாக வெய்யிலில் காத்துகிடந்து. அந்த கம்மாட்டிக்கு மன்னிக்கவும் அந்த காமடியனுக்கு திரும்பிய பக்கமெல்லாம் கட் அவுட் வேறு. தலையில் அடித்துக்கொண்டேன்.

ஒரு எழுத்தாளனுக்கு கொடுக்க்க வேண்டியய வரவேற்ப்பை சினிமா நடிகனுக்கும் நடிகனுக்கு கொடுக்க வேண்டிய வரவேற்ப்பை எழுத்தாளனுக்கும் கொடுக்கும் நாம் எப்படி நல்ல ஆட்சியையும் நல்ல சமுதாயத்தையும் எதிர்பார்க்க முடியும்?

பின் குறிப்பு : தேர்தல் சமயத்தில் அரசியல் கட்ச்சிகள் செய்த ஒரு நல்ல காரியம் என்னவென்றால் மக்கள் திரையில் மட்டுமே பார்த்து ரசித்த தங்கள் அபிமான [கனவு கண்ணிகளை] நடிகைகளை மக்கள் பக்கத்தில் பார்த்து மகிழ வைத்தது.

Tuesday, June 17, 2008

தமிழ்சினிமாவும் கிளைமாக்சும்

God is not always in his heaven. all is not always right with the world . it is not all bad, but it is not all good, it is not ugly, but it is not all beautiful , it is life,life,life,-the only thing that matters . it is savage,cruel, kind, noble, passionate,selfish, generous, stupid, ugly, beautiful,painful, joyous, -it is all those and more and it is all these that i want to know and , by God , i shall though they crucify me for it'.
-Thomas Wolfe


தமிழ் சினிமாவுக்கு கதை முக்கியமோ இல்லையோ ஆனால் கிளைமாக்ஸ் ரொம்ப முக்கியம். கிளைமாக்ஸ் ரசிகர்களை திருப்தி படுத்துமாறு இயக்குனர்கள் பார்த்துக்கொள்வது மிக மிக்கியம். பல படங்களின் கிளைமாஸ் காட்சிகள் அப் படத்தை உருவாக்கிய படைப்பாளியின் முடிவுக்கு எதிரானதாக மற்றவர்களால் மாற்ரப்பட்டுவிடுகிறது. பெரும்பாலும் கிளைமாக்ஸ் காட்சிகள் தயாரிப்பாளர் மற்றும் விநியோகச்த்தர்களாலேயே முடிவு செய்யபடுகிறது.

ஏனென்றால் நம் சமூகத்தின் ஆழ்மனம் ஒரு விடிவிற்காக , ஒரு மீட்பிற்க்காக ஏங்கி கிடக்கிறது. அதுவே கலைகளிலும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. ஆகவே நம் சினிமாவில் மன நிறைவான கிளைமாக்ஸ் இருக்கவேண்டும் என்று மக்கள் எண்ணுகிறார்கள். பெரும்பாலும் தமிழ் சினிமாவில் முடிவில் திருமணம் நடைபெருவதாகவே காட்டுகிர்றார்கள். பல படங்களில் கடைசியில் ஒரு நீண்ட சண்டைக்காட்சி இடம்பெறுகிறது. அதில் தீயவர்கள் அழிக்கப்பட்டு விடுகிறார்கள். இந்த பார்முலாவை வைத்துக்கொண்டே ஒரு சில புதிய இயக்குனர்கள் முடிந்தவரை வித்தியாசமான புதியமுயர்சியை எடுத்து வருகிறார்கள்.

இந்து மதத்தில் முக்தியடைவதை பற்றியும் பிறப்பு அறுப்பு பற்றியும் பேசுகிறார்கள். எனக்கு தோன்றுகிறது ,' தமிழ் சினிமாவின் கதாபாத்திரங்களும் கிளைமாக்சில் முக்தி அடைந்து விடுகிறார்கள் என்று. சுபம் போட்ட பிறகு வாழ்க்கையே இல்லையா ? அதன் பிறகு அக் கதை மாந்தர்களுக்கு துன்பமே வராதா? பின் சுபமான முடிவுகளையே எதிர் பார்ப்பதும் அவ்வாறு இல்லை எனில் அந்த சினிமாவை எதிர்ப்பதும் என்ன ஒரு முட்டாள்தனம். பின் எவ்வாறு தமிழ் சினிமா உலக அரங்கில் மிளிரும்?

Thursday, June 12, 2008

சனிக்கிழைமை இரவு

நான் முதலில் சம்பளத்திற்கு வேலைக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது ஒவ்வொரு நாளும் இரவு படுக்கும் போது நிம்மதியாக தூங்க முடியாது . ஏனென்றால் அடுத்தநாள் காலை வேலைக்கு செல்ல குறித்த நேரத்தில் எழுந்தால் தான் சரியான நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியும். இதை ஒவ்வொரு வேலைக்கு செல்பவரும் நன்கு உணர்ந்திருப்பார்கள்.

ஒவ்வொரு நாளின் இரவும் வேலைக்கு செல்பவர்கள் நிம்மதியாக உறங்காமல் எதோ ஒரு வித படபடப்பிநூடாகவே உறங்கி வருகிறார்கள். ஆனால் சனிக்கிழமை இரவு மட்டும் இவர்களுக்கு மிகவும் கொண்ட்டடமாக உள்ளது . ஏனென்றால் அடுத்த நாள் ஞாயிரு விடுமுறை என்பதால் தாங்கள் நினைத்த நேரத்திற்கு எழுந்திருக்க முடியும் என்பதால் எவ் வித படபடப்பும் மன அழுத்தமும் இல்லாமல் சனிக்கிழமை உறங்க செல்கிறார்கள்.

மற்ற நகரங்களில் எப்படியோ ஆனால் கரூர் , திருப்பூர், ஈரோடு நகரங்களில் வேலைக்கு செல்பவர்கள் சனிக்கிழமை இரவை ஒரு கொண்டாட்டமாகவே கொண்டாடுகிறார்கள். தட்டிவிலாஸ் என்ற இரவு உணவகங்களில் புரோட்டா , இறைச்சி , ஆம்லெட், கலக்கி , கொத்து புரோட்டா மற்றும் மது இவைகளுடன் சனிக்கிழமை இரவை கொண்டாடிவிட்டு இரவு நேரம் கழித்து வீட்டிற்க்கு செல்கிறார்கள். ஏனென்றால் அடுத்தநாள் சீக்கிரம் எழ வேண்டியதில்லை.
இந்த ஓதம் திங்கட்கிழமையும் அவர்கள் மீது அடிக்கும் .
திங்கட் கிழமை காலையில் எழ மிகவும் சிரம படுவார்கள். பெரும்பாலும் திங்கட்
கிழமைகளில் மதியம் வரை வேலைக்கு மட்டம் போட்டு விடுவார்கள். இதனாலேயே இப் பகுதிகளில் திங்கட் கிழமைகளை சின்ன ஞாயிறு என்பார்கள் .
வேலைக்கு சிறிது லேட் ஆக போனால் முதலாளிகள் சொல்வார்கள் நானுந்தான் நேற்று ராத்திரி வேலையமுடுச்சிட்டு உங்கள விட்ட லேட்டா வீட்டுக்கு போனேன் ஆனா நான் இப்ப நேரமே கடைக்கு வல்லியா என்று தொழிலாளிகளை திட்டுவார்கள். இவர்கள் இலாபம் நிறைய சம்பாதிக்கிறார்கள் அதனால் வேலைக்கு சீக்கிரம் வந்து விடுகிர்றார்கள் முதலாளிகள் அவர்களாக சீக்கிரம் வருவதில்லை அவர்கள் சம்பாதிக்கும் பணம் அவர்களை சீக்கிரம் வரவழைத்து விடுகிறது. ஆனால் தொழிலாளிகள் அப்படியா எந்த முதலாளிகள் அவர்களுக்கு போதிய ஊதியம் வழங்குகிறார்கள், அவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் சரியான வசதிகள் செய்து கொடுத்துள்ளார்களா? ஒரு நல்ல கழிப்பறை உண்டா?
பெரும்பான்மையான தொழிலகங்களில் கழிப்பரையே கிடையாது . தண்ணீர் வசதி கிடையாது . பின் நாங்கள் சாப்பிடும் சத்தில்லாத சாப்பாட்டில் எப்படி நாங்கள் சீக்கிரம் பீயை இருந்து விட்டு வேலைக்கு சீக்கிரம் வரமுடியும்?


இதற்க்கு மேல் இந்த தலைப்பில் நான் எழுதவில்லை . ஏனென்றால் எழுத்தாளர்
ச. தமிழ்செல்வன் சனிக்கிழமை இரவை பற்றி ஒரு புத்தகம் எழுத எண்ணியுள்ளார். அவரின் எழுத்தில் சனிக்கிழமை இரவை பற்றி வாசித்தால் அது ஒரு உலக இலக்கியத்திற்கு சமமான வாசிப்பாக இருக்கும்.

Wednesday, June 11, 2008

கடைசியில் இளையராஜா வென்றார்.

நான் ஒரு வேலை நிமித்தமாக ஈரோட்டிலிருந்து கோவை செல்ல வேண்டி ஈரோடு பேருந்து நிலையத்தில் நின்று இருந்தேன். ஈரோட்டிலிருந்து கோவைக்கு
மூன்று நிமிடங்களுக்கு ஒரு பேருந்து உண்டு .

ஒரு தனியார் பேருந்து சும்மா ஜைஜாண்டிக்காக நின்று கொண்டிருந்தது. அதற்கு முன்னதாக ஒரு அரசு பேருந்து எலும்புக்கூடாக நின்று கொண்டிருந்தது. அரசு பேருந்து ஐந்து நிமிடம் முன்னதாக புறப்பட தயாராக நின்று கொண்டிருந்தாலும் அதன் தோற்றத்தை பார்த்து நான் உள்பட பலரும் அதன் தோற்றத்தை பார்த்து பயந்து ஐந்து நிமிடம் கழித்து புறப்படும் தனியார் பேருந்துவிற்காக காத்து கொண்டிருந்தோம்.

திடீரென அந்த அரசு பேருந்துவில் இளையராஜாவின் பாடல் களை இசைக்கவிட்டார்கள். தனியார் பேருந்து விற்காக காத்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் தாங்களாகவே அந்த எலும்புக்கூடு அரசு பேருந்தில் ஏறி அமர்ந்தார்கள். நான் உள்பட . ஒரு நல்ல இசைக்கு எவ்வளவு சக்தி உள்ளது பாருங்கள்.

Friday, June 6, 2008

கந்துவட்டியை கந்தலாக்குவோம்

Every man is a hostage of his own deeds

பீயை தின்னு சம்ப்பதிச்சாலும் பின்னாடி மதிப்பு இருக்குது என்று கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு . பீயை அள்ளி சம்ப்பாதிச்சாலும் பின்னாடி மதிப்பு இருக்கும் என்பது தான் சரியாக இருக்கும் என்பது எனது கருத்து.

முன்னதிற்க்கு அர்த்தம் என்னவென்றால் சமூகம் எந்த வழியில் என்று பார்க்காமல் அவரின் பணத்திற்காக அவரை மதிக்கும் என்பது ஆகும். பின்னதிர்க்கு அர்த்தம் என்னவென்றால் எந்த வேலையாக இருந்ததாலும் கவுரவம் பார்க்காமல் கடின உழைப்புடனும் புத்திக்கூர்மையுடனும் செய்தால் வெற்றி பெற முடியும் என்பதாகும்.

எழுத்தாளர் ச. தமிழ்செல்வன் ஒரு முறை அவருடைய கட்டுரை ஒன்றில் பின்வருமாறு கூறுகிறார். அவர் திருமணங்களுக்கு செல்லும் பொழுது திருமண மண்டபங்களில் யாரோ ஓயாது அழுது கொண்டிருப்பதை என்னால் கேட்கமுடிந்தது. ஆனால் அழுவது யாரென்று என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. நான் எந்த திருமணத்திற்கு சென்றாலும் அந்த அழுகையின் குரலை கேட்கமுடிந்தது. இதனால் எனக்கு திருமணத்திற்கு செல்லவே பயமாக இருந்தது.யார் அழுவது என்றே என்னால் கண்டுகொள்ளமுடியவில்லை. தீவிர தேடுதலுக்கு பின்னே அந்த குரல் மணப்பெண்ணின் மனதினுடைய அழுகுரல் என்று அறிந்து கொண்டேன். இதுவரை வளர்த்த பெற்றோரை பிரிந்து அறிமுகமில்லாத இடத்திற்கு அறிமுகமில்லாத நபர்களுடன் செல்ல வேண்டியதை நினைத்து அப்பெண்ணின் மனது யாருக்கும் தெரியாமல் அழுது கொண்டிருக்கிறது என்று எழுதியுள்ளார். நானும் ஒரு சில கடிடங்களுக்கோ வீடுகளுக்கோ செல்லும் பொழுது மனித இரத்த வாடை வீசுவதை என்னால் உணரமுடிந்தது . எனக்கு நீண்ட நாட்களாக இது ஏன் எப்படி என்று தெரியவில்லை. பின்னர் தான் தெரிந்தது நான் சென்ற இடங்களெல்லாம் ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சி வாழ்கின்ற கந்து வட்டிக்காரர்களின் . இடம் enpathu.

ஒரு முறை கந்து வட்டி நண்பரிடம் கந்து வட்டி கொடுமைகளை பற்றி பேசிக்கொண்டிருந்த பொழுது அவர் சொன்னார் , நாங்களெல்லாம் கந்துவட்டி மூலம் எழைகளின் இரத்தத்தை உறிஞ்சி வாழ்கிறோம் என்று தவறாக நினைக்கிறார்கள்.எந்த ஒரு பிணையும் இல்லாமல் நாங்கள் அவர்களுக்கு அவசரத்திற்கு பணம் கொடுக்கிறோம்.நாங்கள் அவர்களை கொடுமை படுத்தவில்லை .மாறாக அவர்களுக்கு உதவிதான் செய்து வருகிறோம் என்று.நான் சொன்னேன் அப்படி என்றால் வட்டி இல்லாமல் அல்லது வங்கியின் வட்டி விகிதங்களில் ஏழைகளுக்கு கடன் கொடுக்க வேண்டியது தானே என்று. அவரிடம் பதில் இல்லை.என்ன அநியாயம் பாருங்கள் தாங்கள் செய்யும் தவறுக்கு எப்படி நியாயம் கர்ப்பிக்கிறார்கள் என்று.

கந்து வட்டி மூலம் ஐம்பது முதல் எழுபது சதவீதம் வரை வட்டி கட்டுகிரதாம். இவர்களின் இராஜ்யம் இந்தியாவில் மட்டுமில்லாது வெளிநாடுகளுக்கும் சென்று விட்டதாக கேள்வி.எனக்கு தெரிந்த வரை கந்து வட்டிக்காரர்களில் கொங்கு பகுதியில் இருந்து சென்றவர்களே அதிகம் . பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு முடித்து மதிப்பெண் குறைவாகவோ அல்லது தேர்ச்சி அடையாதவர்களோ கந்து கடைக்கு சென்று ஐந்தாறு வருடங்கள் இருந்து தனியாக லைன் [கந்துகடை] போட்டு விடுகிறார்கள்.இப்படி சென்ற பல இளைய தலை முறை கந்து வட்டிக்காரர்களை கொங்கு பகுதியில் காணலாம். அதிகம் மார்க் எடுத்தவர்கள் பொறியியல் படித்துக்கொண்டிருக்கிறார்கள். பொறியியல் படித்தவர்களை விட கந்துக்காரர்களே அதிகம் சம்பாதிக்கிறார்கள்.எனக்கு தெரிந்த கந்து வட்டி நண்பரிடம் தொழில்? எப்படி இருக்கிறது என்று கேட்டேன்.அதிகம் பேர் கந்து கடை ஆரம்பித்து விட்டதால் தொழிலில் போட்டி அதிகமாகிவிட்டதாகவும் முன்பு போல் அதிகம் சம்பாதிக்க முடிவதில்லை என்று கூறுகிறார்.

கந்து வட்டியை ஒழிக்க வேண்டுமானால் மைக்ரோ கிரிடிட் முறையை வங்கிகள் மூலம் அரசாங்கம் நடைமுறை படுத்தவேண்டும்.மைக்ரோ கிரிடிட் என்பது பெயருக்கு ஏற்றார் போலவே மிக குறைந்த அளவிலான பணத்தை மிக குறைந்த வட்டிக்கு தகுதி வாய்ந்தவர்களுக்கு கடனாக கொடுத்து பின் தவணை முறையில் வசூலிப்பது ஆகும். இந்த கடனுக்கு எந்த ஒரு பிணையும் இல்லை.இதற்க்கு மிக சிறந்த உதாரணம் பங்களாதேசத்தில் மைக்ரோ கிரிடிட் முறையில் சாதித்து காட்டிய முகம்மது யூனுஸ் ஆவார். இம் முறையின் மூலம் பெண்களுக்கே கடனை கொடுக்க வேண்டும். ஏனென்றால் ஆண்களை விட பெண்களே கடனை திருப்பி செலுத்தவேண்டும் என்ற பொறுப்பு அதிகம் உடையவர்கள். ஆண்களுக்கு கொடுத்தால் என்ன ஆகும் என்று சொல்லத்தேவயில்லை.

பின் குறிப்பு : கந்து வட்டிக் காரர்கள் தங்கள் தொழில் சிறக்கவேண்டும் என்று வருடம் ஒரு முறை மாம் paarai முனியப்ப சுவாமிக்கு கிடா வெட்டுவது வழக்கம் .

Monday, June 2, 2008

பிரார்த்தனை

மாற்ற முடிந்ததை மாற்றக் கூடிய மன வலிமையையும்
மாற்ற முடியாததை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும்
இவை இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்ளக்கூடிய அறிவையும்
கொடு இறைவா.

Friday, May 30, 2008

காங்கிரஸ் ஆட்சி

எதனையும் நான் நம்பியிருக்கவில்லை
எதைக்கண்டும் எனக்கு பயமில்லை
நான் சுதந்திரன்.

எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் என்னவென்றால் ஒவ்வொரு தேர்தலின் முடிவிலும் அடுத்து தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைப்போம் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.
எனது சந்தேகம் என்னவென்றால் காமராஜர் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பின் எப்படி காமராஜர் ஆட்சி அமைப்பார்கள் ?. இறந்தவர் உயிருடன் மீண்டு வந்த சரித்திரம் இல்லை. ஏசுவை தவிர. அதுவும் உண்மையா இல்லையா என்பது விவாதத்திற்குரிய விஷயம். காமராஜர் ஏசுவை போல கடவுளின் மகனும் அல்ல. பின் எப்படி உயிருடன் வந்து ஆட்சி அமைப்பார்?.
பிறகுதான் தெரிந்தது கர்மவீரர் நேர்மையானவராக இருந்தார். அதனைப்போல நாங்களும் நேர்மையான ஆட்சி அம்மைப்போம் என்று சிம்பாலிக்காக சொல்கிறார்கள் என்று. கர்மவீரரின் மீது எனக்கும் மிகுந்த மரியாதை உண்டு . அவரின் எளிமையான தோற்றத்தை பார்த்தும் அவரைப்பற்றிய அவரின் நேர்மையான குணத்தை பற்றிய கதைகளைக் கேட்டும்.
ஆனால் ஒரு சம்பவம் எனக்கு காமராஜரை பற்றிய எனக்கிருந்த பிம்பத்தை கலைத்தது. அது என்னவென்றால் காமராஜர் எப்பொழுது கரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வரும்பொழுதும் கோவையை தலைமையிடமாக கொண்ட ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான காரில் திருச்சியில் இருந்து வருவது வழக்கம் என்று பலர் கூறக்கேட்ட பிறகே இதனை எழுதுகிறேன்.
ஒரு வேலை இது எதிர்க்க்ச்சிக்கரர்களின் பொய் பிரச்சாரமாகவோ இருக்கலாம்.
எது எப்படியோ காங்கிரஸ் தலைவர்கள் தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைப்போம் என்றும் அது மிக நேர்மையானதாக இருக்கும் என்று சொன்னால் நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
நானும் அந்த நல்லாட்சியை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன்.

Thursday, May 29, 2008

தனவந்தர்களுக்கு ஓர் வேண்டுகோள்

வழக்கமாக நான் இருக்கும் இடத்தில் இருந்து சிறிது தூரம் அதாவது ஒன்றிலிருந்து மூன்று நான்கு கிலோமீட்டருக்குள் செல்வது என்றால் சைக்கிளை மட்டுமே பயன்படுத்துவது வழக்கம். நான் ஒருமுறை அப்படி செல்லும் பொழுது எனக்கு புதிதாய் அறிமுகம் ஆகியிருந்த நண்பர் ஒருவர் ஏன்
சைக்கிளில் செல்கிறீர்கள் என்று கேட்டார் . அதாவது மோட்டார் சைக்கிள் வைத்துள்ளீர்களே பிறகு ஏன் சைக்கிளில் செல்கிறீர்கள் என்று கேட்டார்.
பக்கத்தில் தானே செல்கிறேன் ஆகையால் தான் சைக்கிளில் செல்கிறேன் என்றேன். உடனே அவர் இனி சைக்கிளில் செல்வதாக இருந்தால் என்னுடன் பேசாதீர்கள் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

எனக்கு ஒன்றுமே புறியவில்லை இச் சம்பவத்தை எனது அம்மாவிடம் கூறிய பொழுது அம்மா சொன்னார் நான் ஒரு முறை ஒரு காதணி விழாவிற்கு சென்றிருந்தேன் அங்கு விழா நடத்தியவரின் மைத்துனர் சைக்கிளில் வந்தார் அவ்விலாநடத்துனர் அவரை கண்டுகொள்ளவே இல்லை . சிறிது நேரத்தில் ஒருவர் புல்லட் வண்டியில் வந்து இறங்கினார் . அவ்வரை கண்டவுடன் விழா நடத்துனர் ஓடோடிச்சென்று அவரை வரவேற்றார் .

இதையெல்லாம் அம்மாவின் பக்கத்தில் நின்று பார்த்து கொண்டிருந்தவர் சொன்னாரம் பாரும்மா சொந்த மச்சினன் சைக்கிளில் வந்து இறங்க்குகிறான் அவனை கண்டு கொள்ளவே இல்லை . சொந்தக்காரன் கிடையாது புல்லட்டில் வந்து இறங்கியதும் எப்படிபோய் கும்பிடுபோடறான் என்று. அப்போதுதான் எனக்கு புரிந்தது ஏன் எனது நண்பர் அப்படி சொன்னார் என்று.
இப்படிtதான் சிறிது தூரம் போவதற்கே நாம் நடந்தோ சைக்கிளிலோ செல்லாமல் வாகனங்களை பயன்படுத்துகிறோம். அதிக பஸ் வசதி இருக்கும் இடதிர்க்குக்கூட நாம் கார்கலையோ அல்லது மோட்டார் சைக்கில்கலையோ பயன்படுத்துகிறோம்.

என்னதான் நம்மிடம் வசதி இருந்தாலும் நாம் பெற்றோலை சேமித்து அடுத்த தலைமுறைக்கு கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் நமக்கு சிறிதும் இல்லை.நாம் சைக்கிளில் சென்றால் மற்றவர்கள் மதிக்கிறார்களா இல்லையா என்பதைவிட குறைந்து வரும் இயற்கை செல்வமான கச்சா எண்ணையை குறைந்தபட்சம் அடுத்த தலைமுறை வரைக்குமாவது விட்டுவைக்க நாம் கடமை பட்டுள்ளோம். அதற்குள்ளாவது நாம் மற்று எரிபொருளை கண்டு பிடிக்க மாட்டோமா என்ன?.

வளர்ந்த நாடுகளில் பர்தீர்கலேன்றால் சர்வசாதரணமாக சைக்கிளில் செல்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் ஒரு எம். எல் .எ சைக்கிளில் சைக்கிளில் சட்டசபைக்கு செல்வதையே ஆச்சர்யமாக பார்க்கிறோம். ஏன் நமக்கு இந்த மனோபாவம்?.சொல்லுங்கள்.

முதலில் பணம் படைத்தவர்கள் குறைந்தபடசம் ஏதாவது விசெடங்களுக்கு செல்லும்பொழுது சைக்கிளில் செல்வதை ஆரம்பிக்க வேண்டும்.அப்பொழுதுதான் இந்த நடுத்தர வர்க்கமனோபவம் மாறும் . அப்படி சைக்கிளில் செல்லும் பணக்காரர்களை பார்த்து இந்த தயிர் வடை மிடில்கிளாஸ் கூறும் அவர் லாஸ்ஆகிட்டாரு போல என்று ஏனென்றால் அவர்களின் மனோபாவம் அவ்வாறு என்னசெய்வது இருந்தாலும் பணக்கரர்களே முதலில் சைக்கிளில் செல்வதை ஆரம்பிக்கவேண்டும் . முடிந்தால் முதலமைச்சர்களே கூட சைக்கிளில் சென்று இந்த மிடில் கிளாஸ் மனோ பாவத்தை போக்கவேண்டும்.


இயற்கையை , இயற்கை செல்வங்களை காப்போம் நம்மை நம்பி இருக்கும் நம் சந்ததியினருக்கு.


Tuesday, May 27, 2008

சமர்ப்பணம்

எனது பெற்றோரின் மனதை காயப்படுத்திய தருணங்களுக்காக
வலைப்பூவின் நோக்கம்
எனக்கு எப்படியாவது ஒரு எழுத்தாளனாகிவிட வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. எழுதினால் தமிழின் ஆகச்சிறந்த பத்திரிக்கையான உயிர்ம்மையில் மட்டுமே எழுத வேண்டும் என்று எண்ணி இருந்தேன் .
எனது எழுத்தை பரிச்சார்த்த முறையில் எழுதிப்பார்க்க இவ் வலைப்பூ உதவியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
இவ் வலைப்பூவில் சமூகம் , பொருளாதாரம்,சினிமா , அரசியல் ,இலக்கியம் முதலியவைகளில் எனது சிற்றறிவுக்கு எட்டியவரையில் எழுத எண்ணியுள்ளேன்.
நன்றி
நான் நீண்ட நாட்களாக வலைப்பூ ஒன்று ஆரம்பிக்க எண்ணியிருந்தேன் .ஆனால் கணினியின் அறிவு சிறிதும் இல்லாத எனக்கு வலைப்பூ எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை . தற்செயலாக
தினமலர் கம்ப்யூட்டர் மலரில் வலைப்பூ ஆரம்பிப்பது எப்படி என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார்கள் . அதனை படித்த பிறகே என்னால் இவ் வலைப்பூவை ஆரம்பிக்க முடிந்தது .
தினமலர் பத்திரிக்கைக்கு எனது முதற்கண் நன்றி . மேலும் எனது வாழ்க்கையில் பக்கபலமாக இருந்து இணையத்தை இலவசமாக பயன்படுத்திக்கொள்ள உதவி செய்து வரும் திரு . மோகன்ராஜ் அவர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
மேலும் எனது வாழ்க்கையின் பல கடினமான தருணங்களில் பக்கபலமாக இருந்து என்னை கைப்பற்றி வரும் திரு. சிதம்பரம் , திரு. திருமூர்த்தி அவர்களுக்கு எனது வணக்கங்கள்.
இவ் வலைப்பூவை உருவாக்க உதவி புரிந்த நண்பர்கள் கார்த்தி, சண்முகம் மற்றும் திவ்யா அவர்களுக்கு எனது நன்றி.

பெயர் : தம்பி

இருப்பிடம்: பூமியின் மடியில்