ஒரு முறை கரூரில் நான் வழக்கமாகசெல்லும் வழியில் இருந்து ஏதோ ஒரு வேலையாக வேறு ஒரு ரஸ்தாவில் செல்ல நேர்ந்தது. அப்பொழுது போக்குவரத்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பொழுது தற்செயலாக ஒரு சிறிய விளம்பர பலகையை பார்த்தேன். அதில் மிகச்சிறியதாக எழுத்தாளர் ச. தமிழ் செல்வன் அவர்களின் பெயர் இருந்தது . அதற்கும் கீழ் அவர் கலந்து கொள்ளும் கூட்டத்தை பற்றியும் ,நிகழ்ச்சி நிரலும் இருந்தது .
எனக்கு மிகுந்த ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. ஏனென்றால் தமிழின் மிகசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான ச. தமிழ் செல்வன் கரூர் வந்துள்ளார். இது மகிழ்ச்சியாகவும் அதே சமயம் அவரின் வருகையை எவரும் கண்டுகொள்ளாமலும் , கொண்ட்டாடாமலும் இருப்பது மனக்கஷ்டத்தையும் அளித்தது. நானே வழக்கமாக செல்லும் ரஸ்தாவில் சென்றிருந்தால் இந்த விளம்பரத்தை பார்த்திருக்க முடியாது.
பாருங்கள் தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர் ஒரு நகருக்கு வந்துள்ளார் . அவரை வரவேற்காமல் மக்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று. மற்றொரு சம்பவத்துடன் இந்த சம்பவத்தை ஒப்பிடும் பொழுது நம் கலாச்சாரம் எவ்வளவு வறுமையில் இருக்கிறது என்று உணர முடியும்.
அந்த சம்பவம் என்னவென்றால் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒவ்வொரு நடிகர்களை சம்பளத்திற்கு அமர்த்தி தங்களின் கொள்கைகளை? மக்கள் மத்தியில் சொல்ல பிரச்சாரத்திற்காக பயன்படுத்தியது அனைவரும் அறிந்ததே. அதில் ஒரு அரசியல் கட்சி குண்டுமணி என்றொரு நகைச்சுவை நடிகரை தனது பிர்ச்சாரதிற்க்காக பயன்படுத்தியது. அந்த நடிகர் கரூர் வந்த பொழுது அவருக்கு கொடுத்த வரவேற்பை பாருங்கள்! என்னவென்று சொல்வது .
மாலையில் வரும் அந்த பேர்வழிக்கு காலையில் இருந்தே ஒலிபெருக்கியில் இதோ வந்து விட்டார் அதோ வந்து விட்டார் என்று விளம்பரம்!. மட்டுமல்லாமல், மக்களின் கூட்டம் வேறு அந்த காமடியனை பார்க்க நான்கைந்து மணிநேரமாக வெய்யிலில் காத்துகிடந்து. அந்த கம்மாட்டிக்கு மன்னிக்கவும் அந்த காமடியனுக்கு திரும்பிய பக்கமெல்லாம் கட் அவுட் வேறு. தலையில் அடித்துக்கொண்டேன்.
ஒரு எழுத்தாளனுக்கு கொடுக்க்க வேண்டியய வரவேற்ப்பை சினிமா நடிகனுக்கும் நடிகனுக்கு கொடுக்க வேண்டிய வரவேற்ப்பை எழுத்தாளனுக்கும் கொடுக்கும் நாம் எப்படி நல்ல ஆட்சியையும் நல்ல சமுதாயத்தையும் எதிர்பார்க்க முடியும்?
பின் குறிப்பு : தேர்தல் சமயத்தில் அரசியல் கட்ச்சிகள் செய்த ஒரு நல்ல காரியம் என்னவென்றால் மக்கள் திரையில் மட்டுமே பார்த்து ரசித்த தங்கள் அபிமான [கனவு கண்ணிகளை] நடிகைகளை மக்கள் பக்கத்தில் பார்த்து மகிழ வைத்தது.
1 comment:
Dont blame every one for simple reason.Sir i need 10000 now.Will u give me or get me a loan from a Bank. In your view all of them are wrong. I have never seen a person like u. Dont be negative.Be positive. Open your eyes now.
Post a Comment