Thursday, June 12, 2008

சனிக்கிழைமை இரவு

நான் முதலில் சம்பளத்திற்கு வேலைக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது ஒவ்வொரு நாளும் இரவு படுக்கும் போது நிம்மதியாக தூங்க முடியாது . ஏனென்றால் அடுத்தநாள் காலை வேலைக்கு செல்ல குறித்த நேரத்தில் எழுந்தால் தான் சரியான நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியும். இதை ஒவ்வொரு வேலைக்கு செல்பவரும் நன்கு உணர்ந்திருப்பார்கள்.

ஒவ்வொரு நாளின் இரவும் வேலைக்கு செல்பவர்கள் நிம்மதியாக உறங்காமல் எதோ ஒரு வித படபடப்பிநூடாகவே உறங்கி வருகிறார்கள். ஆனால் சனிக்கிழமை இரவு மட்டும் இவர்களுக்கு மிகவும் கொண்ட்டடமாக உள்ளது . ஏனென்றால் அடுத்த நாள் ஞாயிரு விடுமுறை என்பதால் தாங்கள் நினைத்த நேரத்திற்கு எழுந்திருக்க முடியும் என்பதால் எவ் வித படபடப்பும் மன அழுத்தமும் இல்லாமல் சனிக்கிழமை உறங்க செல்கிறார்கள்.

மற்ற நகரங்களில் எப்படியோ ஆனால் கரூர் , திருப்பூர், ஈரோடு நகரங்களில் வேலைக்கு செல்பவர்கள் சனிக்கிழமை இரவை ஒரு கொண்டாட்டமாகவே கொண்டாடுகிறார்கள். தட்டிவிலாஸ் என்ற இரவு உணவகங்களில் புரோட்டா , இறைச்சி , ஆம்லெட், கலக்கி , கொத்து புரோட்டா மற்றும் மது இவைகளுடன் சனிக்கிழமை இரவை கொண்டாடிவிட்டு இரவு நேரம் கழித்து வீட்டிற்க்கு செல்கிறார்கள். ஏனென்றால் அடுத்தநாள் சீக்கிரம் எழ வேண்டியதில்லை.
இந்த ஓதம் திங்கட்கிழமையும் அவர்கள் மீது அடிக்கும் .
திங்கட் கிழமை காலையில் எழ மிகவும் சிரம படுவார்கள். பெரும்பாலும் திங்கட்
கிழமைகளில் மதியம் வரை வேலைக்கு மட்டம் போட்டு விடுவார்கள். இதனாலேயே இப் பகுதிகளில் திங்கட் கிழமைகளை சின்ன ஞாயிறு என்பார்கள் .
வேலைக்கு சிறிது லேட் ஆக போனால் முதலாளிகள் சொல்வார்கள் நானுந்தான் நேற்று ராத்திரி வேலையமுடுச்சிட்டு உங்கள விட்ட லேட்டா வீட்டுக்கு போனேன் ஆனா நான் இப்ப நேரமே கடைக்கு வல்லியா என்று தொழிலாளிகளை திட்டுவார்கள். இவர்கள் இலாபம் நிறைய சம்பாதிக்கிறார்கள் அதனால் வேலைக்கு சீக்கிரம் வந்து விடுகிர்றார்கள் முதலாளிகள் அவர்களாக சீக்கிரம் வருவதில்லை அவர்கள் சம்பாதிக்கும் பணம் அவர்களை சீக்கிரம் வரவழைத்து விடுகிறது. ஆனால் தொழிலாளிகள் அப்படியா எந்த முதலாளிகள் அவர்களுக்கு போதிய ஊதியம் வழங்குகிறார்கள், அவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் சரியான வசதிகள் செய்து கொடுத்துள்ளார்களா? ஒரு நல்ல கழிப்பறை உண்டா?
பெரும்பான்மையான தொழிலகங்களில் கழிப்பரையே கிடையாது . தண்ணீர் வசதி கிடையாது . பின் நாங்கள் சாப்பிடும் சத்தில்லாத சாப்பாட்டில் எப்படி நாங்கள் சீக்கிரம் பீயை இருந்து விட்டு வேலைக்கு சீக்கிரம் வரமுடியும்?


இதற்க்கு மேல் இந்த தலைப்பில் நான் எழுதவில்லை . ஏனென்றால் எழுத்தாளர்
ச. தமிழ்செல்வன் சனிக்கிழமை இரவை பற்றி ஒரு புத்தகம் எழுத எண்ணியுள்ளார். அவரின் எழுத்தில் சனிக்கிழமை இரவை பற்றி வாசித்தால் அது ஒரு உலக இலக்கியத்திற்கு சமமான வாசிப்பாக இருக்கும்.