Every man is a hostage of his own deeds
பீயை தின்னு சம்ப்பதிச்சாலும் பின்னாடி மதிப்பு இருக்குது என்று கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு . பீயை அள்ளி சம்ப்பாதிச்சாலும் பின்னாடி மதிப்பு இருக்கும் என்பது தான் சரியாக இருக்கும் என்பது எனது கருத்து.
முன்னதிற்க்கு அர்த்தம் என்னவென்றால் சமூகம் எந்த வழியில் என்று பார்க்காமல் அவரின் பணத்திற்காக அவரை மதிக்கும் என்பது ஆகும். பின்னதிர்க்கு அர்த்தம் என்னவென்றால் எந்த வேலையாக இருந்ததாலும் கவுரவம் பார்க்காமல் கடின உழைப்புடனும் புத்திக்கூர்மையுடனும் செய்தால் வெற்றி பெற முடியும் என்பதாகும்.
எழுத்தாளர் ச. தமிழ்செல்வன் ஒரு முறை அவருடைய கட்டுரை ஒன்றில் பின்வருமாறு கூறுகிறார். அவர் திருமணங்களுக்கு செல்லும் பொழுது திருமண மண்டபங்களில் யாரோ ஓயாது அழுது கொண்டிருப்பதை என்னால் கேட்கமுடிந்தது. ஆனால் அழுவது யாரென்று என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. நான் எந்த திருமணத்திற்கு சென்றாலும் அந்த அழுகையின் குரலை கேட்கமுடிந்தது. இதனால் எனக்கு திருமணத்திற்கு செல்லவே பயமாக இருந்தது.யார் அழுவது என்றே என்னால் கண்டுகொள்ளமுடியவில்லை. தீவிர தேடுதலுக்கு பின்னே அந்த குரல் மணப்பெண்ணின் மனதினுடைய அழுகுரல் என்று அறிந்து கொண்டேன். இதுவரை வளர்த்த பெற்றோரை பிரிந்து அறிமுகமில்லாத இடத்திற்கு அறிமுகமில்லாத நபர்களுடன் செல்ல வேண்டியதை நினைத்து அப்பெண்ணின் மனது யாருக்கும் தெரியாமல் அழுது கொண்டிருக்கிறது என்று எழுதியுள்ளார். நானும் ஒரு சில கடிடங்களுக்கோ வீடுகளுக்கோ செல்லும் பொழுது மனித இரத்த வாடை வீசுவதை என்னால் உணரமுடிந்தது . எனக்கு நீண்ட நாட்களாக இது ஏன் எப்படி என்று தெரியவில்லை. பின்னர் தான் தெரிந்தது நான் சென்ற இடங்களெல்லாம் ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சி வாழ்கின்ற கந்து வட்டிக்காரர்களின் . இடம் enpathu.
ஒரு முறை கந்து வட்டி நண்பரிடம் கந்து வட்டி கொடுமைகளை பற்றி பேசிக்கொண்டிருந்த பொழுது அவர் சொன்னார் , நாங்களெல்லாம் கந்துவட்டி மூலம் எழைகளின் இரத்தத்தை உறிஞ்சி வாழ்கிறோம் என்று தவறாக நினைக்கிறார்கள்.எந்த ஒரு பிணையும் இல்லாமல் நாங்கள் அவர்களுக்கு அவசரத்திற்கு பணம் கொடுக்கிறோம்.நாங்கள் அவர்களை கொடுமை படுத்தவில்லை .மாறாக அவர்களுக்கு உதவிதான் செய்து வருகிறோம் என்று.நான் சொன்னேன் அப்படி என்றால் வட்டி இல்லாமல் அல்லது வங்கியின் வட்டி விகிதங்களில் ஏழைகளுக்கு கடன் கொடுக்க வேண்டியது தானே என்று. அவரிடம் பதில் இல்லை.என்ன அநியாயம் பாருங்கள் தாங்கள் செய்யும் தவறுக்கு எப்படி நியாயம் கர்ப்பிக்கிறார்கள் என்று.
கந்து வட்டி மூலம் ஐம்பது முதல் எழுபது சதவீதம் வரை வட்டி கட்டுகிரதாம். இவர்களின் இராஜ்யம் இந்தியாவில் மட்டுமில்லாது வெளிநாடுகளுக்கும் சென்று விட்டதாக கேள்வி.எனக்கு தெரிந்த வரை கந்து வட்டிக்காரர்களில் கொங்கு பகுதியில் இருந்து சென்றவர்களே அதிகம் . பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு முடித்து மதிப்பெண் குறைவாகவோ அல்லது தேர்ச்சி அடையாதவர்களோ கந்து கடைக்கு சென்று ஐந்தாறு வருடங்கள் இருந்து தனியாக லைன் [கந்துகடை] போட்டு விடுகிறார்கள்.இப்படி சென்ற பல இளைய தலை முறை கந்து வட்டிக்காரர்களை கொங்கு பகுதியில் காணலாம். அதிகம் மார்க் எடுத்தவர்கள் பொறியியல் படித்துக்கொண்டிருக்கிறார்கள். பொறியியல் படித்தவர்களை விட கந்துக்காரர்களே அதிகம் சம்பாதிக்கிறார்கள்.எனக்கு தெரிந்த கந்து வட்டி நண்பரிடம் தொழில்? எப்படி இருக்கிறது என்று கேட்டேன்.அதிகம் பேர் கந்து கடை ஆரம்பித்து விட்டதால் தொழிலில் போட்டி அதிகமாகிவிட்டதாகவும் முன்பு போல் அதிகம் சம்பாதிக்க முடிவதில்லை என்று கூறுகிறார்.
கந்து வட்டியை ஒழிக்க வேண்டுமானால் மைக்ரோ கிரிடிட் முறையை வங்கிகள் மூலம் அரசாங்கம் நடைமுறை படுத்தவேண்டும்.மைக்ரோ கிரிடிட் என்பது பெயருக்கு ஏற்றார் போலவே மிக குறைந்த அளவிலான பணத்தை மிக குறைந்த வட்டிக்கு தகுதி வாய்ந்தவர்களுக்கு கடனாக கொடுத்து பின் தவணை முறையில் வசூலிப்பது ஆகும். இந்த கடனுக்கு எந்த ஒரு பிணையும் இல்லை.இதற்க்கு மிக சிறந்த உதாரணம் பங்களாதேசத்தில் மைக்ரோ கிரிடிட் முறையில் சாதித்து காட்டிய முகம்மது யூனுஸ் ஆவார். இம் முறையின் மூலம் பெண்களுக்கே கடனை கொடுக்க வேண்டும். ஏனென்றால் ஆண்களை விட பெண்களே கடனை திருப்பி செலுத்தவேண்டும் என்ற பொறுப்பு அதிகம் உடையவர்கள். ஆண்களுக்கு கொடுத்தால் என்ன ஆகும் என்று சொல்லத்தேவயில்லை.
பின் குறிப்பு : கந்து வட்டிக் காரர்கள் தங்கள் தொழில் சிறக்கவேண்டும் என்று வருடம் ஒரு முறை மாம் paarai முனியப்ப சுவாமிக்கு கிடா வெட்டுவது வழக்கம் .