Monday, September 28, 2009

பாட்டி சொல்லை தட்டாதே

மணமக்களுக்கு திருமணத்திற்கு முன்பு மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்படவேண்டும் என்று ஆச்சி மனோரமா கூறியிருப்பதோடு மட்டுமல்லாமல் முதல்வர் மற்றும் துணை முதல்வரை நேரில் சந்தித்து இதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். மனோரமா போன்றவர்கள் இந்நாள் முன்னாள் முதல்வரளிடம் செல்வாக்கு உள்ளவர்கள் இதைப்போன்ற காரியங்களை தங்களது நட்பை பயன்படுத்தி செய்வதன் மூலம் மகள் என்றும் அவர்களுக்கு கடமைப்பட்டவர்களாக இருப்பார்கள்.

அடுத்த முதல்வர் நான் தான் நீதான் என்று அடித்துக்கொள்ளும் திரைப்பட சூப்பர் ஸ்டார்கள் இதுபோன்ற காரியங்களை முன்னின்று செய்தால் நன்றாக இருக்கும்.

மனோரமா வைத்துள்ள கோரிக்கையை திரு முதல்வர் கருணாநிதி அவர்கள் செயல் படுத்தினால் அது அவர் வாழ்கையில் செய்த மிகப்பெரும் புண்ணியம் மற்றும் சாதனையாக இருக்கும்.

No comments: