Thursday, September 10, 2009

எனது போர்ட்போலியோ


“வாங்கவும் விற்கவும் கற்றுக்கொள்”என்ற கோஷம் வந்ததென்னவோ உண்மைதான்!நாம் வாங்கவும் விற்கவும் ஆரம்பித்தோம்;நாம் கற்றுக்கொண்டோம்.

2008 ஜனவரி முதல் தேதியே எனது பங்குச்சந்தையின் முதல் பிரவேசம் ஆகும்.எனது நண்பரின் தரகு நிறுவனத்தில் நான் எனது நாட்களை கழித்துக்கொண்டிருந்த சமயம் நண்பர் என்னை பங்குகளை வாங்கும்படி அறிவுறித்தினார். முதலில் அவருக்கு நன்றி. ஏனென்றால் அவர் கூறவில்லை என்றால் என்னால் இத்தகைய ஒரு முதலீட்டு வாய்ப்பை நான் இழந்திருப்பேன்.

பலரை போலவே நானும் பங்குசந்தையை பற்றிய பாலபாடங்களை அறியாமல் நுழைந்தவன் ஆவேன்.நான் பொருளாதாரத்தில் எனது அப்பாவையே சர்ந்திருப்பதனால் அவரிடம் இருந்து ரூபாய் 60000 பெற்று பங்குகளில் முதலீடு செய்தேன். நான் முதலீடு செய்த போது பங்குகளின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டிருந்தது. நானும் இத்தனை நாட்கள் தவறவிட்டுவிட்டோமே என்று எண்ணி காஞ்ச மாடு கம்பில் விழுந்ததைப்போல பங்குகளில் முதலீடு செய்தேன்.நான் முதலீடு செய்த பங்குகள் எல்லாம் நான் வாங்கிய விலைகளை விட அதிகமாக ஏறிக்கொண்டே இருந்தது. அப்பாவும் , நண்பரும் பங்குகளை விற்று விட சொன்னார்கள். நான் இன்னும் விலை ஏறும் என்று வைத்திருந்தேன்.ஜனவரி 21 வந்தது அதன் பிறகு நடந்த்தவைகள் வரலாறு. சொல்லத்தேவையில்லை.எனது 75% பணத்தை காணவில்லை. பிறகு தான் நான் எவ்வளவு பெரிய முட்டாள்தனம் செய்துள்ளேன் என்று புரிந்து கொண்டேன்.

பிறகு பங்கு சந்தையை பற்றியும் அதன் செயல் பாடுகள் நிறுவனம் மற்றும் விலையை எவ்வாறு தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதை பற்றி தெரிந்துகொள்ள முற்பட்டேன்.அதில் வெற்றியும் பெற்றேன். “ஞான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ” என்ற எண்ணத்தில் நான் தெரிவு செய்த நிறுவனங்களையும் அதன் விலையையும் இப்போது கீழே கொடுத்துள்ளேன்.முதலீட்டாளர்கள் வாங்கி பயன் பெறலாம்.

இவை அனைத்தும் நீண்ட கால முதலீட்டுக்காக மட்டுமே.

நீண்ட கால முதலீடு என்பது என்னை பொறுத்தவரை ஐந்திலிருந்து எட்டு வருடங்கள் வரை.

மிக முக்கியமான எச்சரிக்கை இது எனது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் மட்டுமே. இதில் ஏதாவது தவறு நிகழ்ந்தால் முதலீட்டாளர்கள் தயவு செய்து என்னை குற்றம் சொல்ல வேண்டாம்.

வழக்கம் போல் சொல்லும் டயலாக் முதலீட்டலர்கள்தங்கள் சொந்த முடிவிலேயே முதலீட்டை மேற்கொள்ளவும்.

பின்வருவது எனது போர்ட்போலியோ ஆகும்.

வாங்க வேண்டிய நிறுவனம். வாங்கும் விலை

1. BEL…………………………………………………………………………. 750 to 850
2. CAIRN…………………………………………………………………….. 140 to 150
3. TNPL………………………………………………………………………. 85 to 100
4. KVB………………………………………………………………………… 270 to 300
5. ITC…………………………………………………………………………. 50 to 60
6. HUL ………………………………………………………………………. 75 to 100
7. TATA STEEL……………………………………………………………… 530 to 600
8. CUB…………………………………………………………………………. 19 to 23
9. HINDALCO…………………………………………………………………. 135 to 140
10. IDEA CELLULAR………………………………………………………….. 74 to 84
11. ASHOK LEYLAND………………………………………………………… 20 to 25
12. AMBUJA CEMENTS……………………………………………………….. 70 to 75
13. HDIL…………………………………………………………………………… 325 to 400
14. LASHMI MACHINE WORKS……………………………………………… 1000 to 1200

மேற்சொன்ன விலைகள் வந்தால் வாங்குங்கள் இல்லை எனில் விட்டுவிடலாம்.

இக்கட்டுரை எழுதுமளவிற்கு பங்குசந்தையை அறிமுகம் செய்த திரு. மோகன்ராஜ் அவர்களுக்கும், சந்தை நிலவரத்தை அடிக்கடி எனக்கு கூறி வரும் நண்பர்கள் திரு கார்த்தி மற்றும் திவ்யா ஆகியோர்க்கு எனது வணக்கங்கள்.

No comments: