Monday, September 28, 2009

நாயோடு நாயாக

இன்று எனது நண்பரின் அப்பா என்னை எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் யூனியன் ஆபீஸில் சென்று விதை நெல் கிடைக்குமா? என்று பார்த்து வரசொன்னார்.நான் இது வரை யூனியன் ஆபீஸ் சென்றதில்லை. யூனியன் ஆபீஸ் சென்ற எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. காம்பவுண்டு சுவருக்கு உள்ளே உள்ள ஆபீசின் கட்டிடத்தின் நீளமான படியில் இரண்டு நாய்கள் படுத்து இருந்தன. எனக்கு ஒரு கணம் சந்தேகம் வந்து விட்டது.ஒருவேளை நான் தவறுதலாக கால்நடை மருத்துவ மனைக்குத்தான் வந்து விட்டேனோ? என்று. பிறகு சுதாரித்துக்கொண்டு அலுவலகத்தில் விசாரித்தேன் இது யூனியன் அப்பீஸ் தானா? என்று. ஆமாம் என்றார்கள்.பிறகு இந்த ஆபீசின் உயர் அதிகாரி யாரென்று விசாரித்தேன் –எனக்கு இந்த மாதிரி அரசாங்க அலுவலகங்களில் உயரதிகாரிகள் வகிக்கும் பதவிகளின் பெயர்கள் தெரியாது– அதற்க்கு ஆணையர் தான் உயர் அதிகாரி என்று சொன்னார்கள். அந்த ஆணையரிடம் சென்று ஐயா இந்த ஆபீசிக்குள் நுழையும் படியில் இரண்டு நாய்கள் படுத்துள்ளன எப்படி ஐயா உள்ளே வருவது என்று கேட்டேன். (நீங்கள் நம்ப மாட்டீர்கள்) அந்த ஆணையர் சொன்னார்,”என்னை என்ன நாய் புடிக்க சொல்லுறியா?அந்த நாய் வருசக்கணக்கில் இங்குதான் படுத்து இருக்குது, எவனையும் கடிச்சதில்லை.எல்லோரும் கம்முனு இருக்கிறானுக உனக்கும் மட்டும் என்ன வந்தது? ஒழுங்கா போய்டு. என்று சொன்னார். நான் ஒரு கணம் ஆடிப்போய்விட்டேன் நான் என்ன சொன்னேன் இந்தா ஆள் இப்படி கத்துறான் என்று.நான் பக்கத்தில் இருந்த என் நண்பனிடம் கேட்டேன் (வடிவேலு – திரும்ப திரும்ப பேசுற என்ற நகைச்சுவை காட்ச்சியில் வருவதை போன்று ) நான் சரியாத்தான பேசுறேன் என்று? அவனும் நீ சரியாத்தான் பேசுற என்று சொன்னான். பிறகு நான் சுதாரித்துக்கொண்டு இனிமே இந்த ஆணையரிடம் பேசினால் அங்கு உள்ள எல்லோரும் நம்மை பயித்தியக்காரன் என்று சொல்லிவிடுவார்கள் என்று நினைத்துக்கொண்டு வந்துவிட்டேன்

ஒருமுறை எனது உறவினர்கள் பழனியில் தங்கத்தேர் ஓட்டுகிறோம் என்று என்னை அழைத்தார்கள். எழு மணி வாக்கில் தங்கத்தேர் சுற்றிவர தொடங்கியது மக்கள் கூட்டமாக தேரை பார்க்க ஓடினார்கள் அந்தக்கூடத்தின் மத்தியில் இரண்டு நாய்கள் அங்கும்மிங்கும் அலைந்து கொண்டிருந்தது. எனக்கு தூக்கிவாரிப்போட்டது.அந்த நாய்கள் எந்த சமயத்திலும் அவர்களை கடிக்கக்கூடும்.ஆனால் மக்கள் எந்த சொரணையும் இல்லாமல் இருக்கிறார்களே என்று நினைத்து அங்குள்ள செக்க்யூரிட்டியிடம் ,”என்னங்க சார் இப்படி மலை மீது நாய்கள் திரிகின்றன?” என்று கேட்டேன்.அதற்க்கு அவர் சொன்னார்,” என்னை என்ன நாய் புடிக்க சொல்லுறியா?”என்று. எனக்கு கோபம் தலைக்கு ஏறிவிட்டது அதற்குள் என் நண்பர்கள் இங்கு பிரச்சனை வேண்டாம் தயவு செய்து விட்டுவிடு என்றார்கள்.

இங்கு கரூரில் எங்கு பார்த்தாலும் நாய்கள் மயம்தான். கரூரில் மட்டுமல்ல எங்குமே இந்த நிலைமைதான் என்கிறீர்களா?.சரி நான் இந்த நாய்களை ஒழிக்க வேண்டி கரூர் நகராட்ச்சி ஆணையரிடம் மனு கொடுக்கப்போனேன்

அப்பொழுது அங்கு இருந்த பியூன் சொன்னான், ” நீங்க யாரு எங்கிருந்து வருகிறீர்கள்? ஏதாவது அமைப்பை சேர்ந்தவரா?( இந்த மாதிரி விசயங்களை சுட்டிக்காட்டுவது எதோ ஒரு சில அமைப்புகள் தான் என்றும் தனிமனிதர் யாரும் இப்படி புகார் சொல்வதில்லை என்றும் அந்த பீயுனின் புத்தியில் பதிந்துள்ளது).

இல்லை என்றேன்

சரி நீங்கக் எந்த ஏரியா?

வெண்ணைமலை (கரூர்நகராட்ச்சிக்கு உட்பட்டதல்ல)ஐயா நான் தினமும் கரூர் நகராட்ச்சிக்கு உட்ப்பட்ட இடத்தில் தானய்யா நடக்கிறேன் பஸ் ஏறுகிறேன் பேருந்து நிலையத்தில் கூட நாய்கள் உண்டு.

சரி அபப ஒரு இருபது பொது மக்களிடம் கையெழுத்து பெற்ற ஒரு புகார் கடிதத்தை அளியுங்கள்.

நான் எதற்காக இருபது பேரை தேடிப்போக வேண்டும்? எனது பிரச்சனை இது

சரி அப்போ நாளை வந்து நகராட்ச்சி ஆணையரை பாருங்கள்.

அடுத்தநாள் சென்று நகராட்ச்சி ஆணையரிடம் தெரு நாய்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க ஒரு புகார் கடிதம் அளித்தேன்.அவர் சரி நடவடிக்கை எடுக்கிறேன் என்றார். மேலும் உங்கள் விலாசத்தை கொடுத்துவிட்டுப்போங்கள்.நாங்கள் நடவடிக்கை எடுக்கும் போது உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம் என்றார்.நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனக்கு பதிலும் அனுப்பவில்லை.

இந்த நாய்களை பற்றி எவரிடமாவது புகார் கொடுக்க சென்றால் ஏதோ என் செயல் குழந்தை தனத்தை போன்றது என்றோ அல்லது நான் எதோ கொஞ்சம் மன நலம் பாதிக்கப்பட்டவன் என்றோ நினைக்கிறார்கள்.நீங்களே கொஞ்சம் சொல்லுங்களேன் நான் மன நலம் பாதிக்கப்பட்டவனா?

பின் குறிப்பு: // மதுரையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வெறி நாய்கடியால் ரேப்பிஸ் நோய் தாக்கப்பட்ட எயிட்ஸ் நோயாளி தப்பி ஓட்டம்// இது அண்மையில் படித்த செய்தி.

இந்தியா மற்றும் ஆப்ரிக்க நாடு ஒன்றிற்கு செல்லும் ஐரோப்பிய சுற்றுலா பயணிகளுக்கு அந்தந்த ஐரோப்பிய நாடுகள் விடுத்த எச்சரிக்கை என்னவென்றால் ”தெருநாய்கள் அதிகம் ஜாக்கிருதை”

ரேப்பிஸ் நோய் தாக்கினால் மரணம் நிச்சயம்

வெறி நாய் கடிக்கு அரசு மருத்துவ மனையில் போதிய மருந்துகள் கையிருப்பில் இருப்பதில்லை. தனியார் மருத்துவ மனையில் வெறி நாய் கடிக்கு போடும் ஊசி மருந்தின் விலை சில ஆயிரங்கள்

தெருவில் நாய்களை சுதந்திரமாக திரிய விடும் நாய் உரிமையாளர்கள் எப்போதும் கூறும் ஒரு செய்தி ” எங்கள் நாய் காடிக்காது”

No comments: