உயர்திரு சாரு சார் அவர்களுக்கு வணக்கம்
உங்களின் அபுனைவை மட்டுமே அதிகம் வாசித்த எனக்கு ஸீரோ டிகிரீ வாசித்து முடித்ததும் உங்களின் மீதான எனக்கிருந்த மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது. பல விசயங்களில் உங்களின் கருத்துக்களோடு ஒத்துப்போகும் எனக்கு இளையராஜா பற்றிய உங்களின் கருத்துடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லை.மன்னிக்கவும்.இளையராஜா பற்றிய தங்களின் கருத்துக்கு (நான் கடவுள் விமர்சனம்) என் எதிர்வினையே இது.
மேலை நாடுகளில் ஒரு இசை கலைஞன் தன்னுடைய இசை திறமையை வெளிப்படுத்த திரைப்படத்தை நம்பி இருப்பத்தில்லை.அவனுக்கு வேறு வழிகள் உள்ளன ஆனால் தமிழ்நாட்டில் ஏன்? இந்தியாவில் கூட அப்படிப்பட்ட நிலை தான் உள்ளதா? தமிழ்நாட்டில் ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ஒரு எளிய மனிதன் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் தன்னுள் ஒளிந்த்திருக்கும் இசை திறமையை வெளிக்கொண்டு வர விரும்பும் பொழுது அவன் என்ன செய்ய முடியும்?அந்த நாட்டில் உள்ள இசை சூழலில் மட்டுமே இயங்க முடியும்.அவ்வாறு அவன் இயங்கும் போது அந்த சூழலே அவனை விளுங்கிக்கொள்கிறபோது அவன் அதில் மட்டுமே ஆகசிரந்தவனாக ஆக முடிகிறது.அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருப்பவர்தான் இளையராஜா என்னும் மாபெரும் இசைகலைஞன்.
தமிழ்நாட்டில் இசைஎன்றால் திரை இசை மட்டும் தான் என்ற நிலை இல்லாமல் ஆல்பங்கள் மற்றும் மேடை இசை (மேலை நாடுகளில் உள்ளது போல்) காலம் காலமாக இருந்திருந்தால் இளையராஜா திரையிசையில் தான் இருந்திருப்பாரா?. இளையராஜா ஒரு மாபெரும் இசை கலைஞன் மட்டுமே.அவருடைய இசையை சினிமாவில் எப்படி பயன்படுத்துவது எவ்வளவு பயன்படுத்துவது போன்றவற்றை திரைப்படத்தின் இயக்குனர் தான் முடிவு செய்ய வேண்டுமேயொழிய இசை கலைஞன் அல்ல.
மூன்று ஆண்டுகளாக நான் கடவுள் என்ற திரைப்படத்தை எடுத்த பாலா ஒவ்வொரு பிரேமையும் பார்த்து பார்த்து செதுக்கிய பாலா ஏன் படத்திற்கு எதிராக துருத்திக்கொண்டிருக்கும் இசையை வெட்டி விட நினைக்கவில்லை? ஏனென்றால் பாலாவே தான் ஒரு மசாலா படம் எடுக்கிறோமா அல்லது கமர்சியல் படம் எடுக்கிறோமா? அல்லது தீவிர சினிமா எடுக்கிறோமா என்ற ஒரு குழப்பமான நிலையில்தான் இருக்கிறார். சரி அகிரா குரோசோவா மற்றும் பனுவல் போன்றோரின் சினிமாக்களைப் போல் உலகத் தரத்தில் எடுக்கத் தெரிந்த பாலாவுக்கு ஏன் environment sound மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வில்லை?
சரி அதே இளையராஜா அகிரா குரோசோவின் படத்திற்கு இசை அமைத்திருந்தால் அகிரா குரோசோவா இளையராஜாவின் இசையை எப்படி பயன்படுத்தியிருப்பார்? அல்லா ரக்கா ரஹ்மான் ரஜினி (இங்கு ராமராஜன் ரஜினியாகிறார்) படங்களுக்கு எப்படி இசை அமைத்துள்ளார்.
சரி அதென்ன ராமராஜனின் கரகாட்டகாரன்? கரகாட்டகாரனின் இயக்குனரின் பெயரை மறந்து விட்டீர்களா? ஒரு சினிமாவிற்கு பாடல்கள் வேண்டுமென்று நினைக்கிறீர்களா? ஒரு சினிமாவின் பின்னணி இசை மற்றும் தவிர்க்க முடியாமல் பாடல் வேண்டுமென்றால் அதன் இசை அந்த திரைப் படத்தில் கதை நிகழும் பிராந்தியத்தின் வாத்தியக் கருவிகளின் இசை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் படத்தின் தன்மை கெடாமல் இருக்கும். ஆஸ்கார் விருதுதான் சினிமாவிற்கு தரப்படும் ஆகச் சிறந்த விருதா? மரணம் ஒரு புதிர். அதைப் பார்த்து அஞ்சாதவர்கள் இந்த உலகத்தில் இருந்ததில்லையா? அவர்கள் அதை விருப்புடன் ஏற்றுக் கொள்ளவில்லையா? ஏன் மரணத்தை ரொமான்டிக்காக பார்க்க கூடாதா? காசியில் எரிக்க படும் பிணத்தின் ஆத்மா இறைவனை அடையும் என்ற நம்பிக்கையினால் அதை ரொமான்டிக்காக இளையராஜா பார்த்திருக்க கூடாதா?
உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காத இளையராஜாவின் இசையை உண்மையிலேயே நீங்கள் கேட்காமல் விட்டிருப்பீர்களேயானால் நீங்கள் ஒரு மிகச் சிறந்த இசை அனுபவத்தை தவற விட்டுள்ளீர்கள் என்பது ஏன் தாழ்மையான கருத்து.
2 comments:
சாரு இப்ப என்ன நினைச்ச என்ன? உகலம் தெரிந்து கொள்ள எத்தனையோ மேதை உள்ளனர். அவர்களை படியுங்கள். அவர் கேட்பதாக சொல்லும் ஒலக இசையை நாமே கேட்டக முடியாதா? இதுக்கு சாரு மோரு எல்லாம் எதுக்கு?
என்னையும் பொருட்படுத்தி ஒரு பின்னோட்டம் போட்டதற்கு மிக மிக மிக நன்றி kuki
ஒன்று மட்டும் நிச்சயம் மிஸ்டர் குக்கி சாருவின் எழுத்தின் மூலம் எனது பண்பியல் தொகுப்பு கண்டிப்பாக மாறியுள்ளது. அதற்காக சாருவிற்கு எனது நன்றி
மீண்டும் ஒரு முறை எனது வலிப்பூவிற்கு வந்ததற்கு உங்களுக்கு நன்றி குக்கி
Post a Comment